Friday, July 30, 2010

மகாராணி உன்னைத் தேடி

மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்

பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்

கை வந்து தொட்டது மெல்ல
காமத்துப் பாலுறை சொல்ல

இளமைப் பயிலும் தினம்
மகாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

மார்கழிப் பனித்துளி பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே

தென் பாண்டி முத்துகள் போலே
என்ன என்ன கோலங்கள் மேலே
ரசிக்கும் கவிதை மனம்

மகாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

திரைப்படம்: ஆயிரம் வாசல் இதயம்
பாடல்: மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
பாடகர்கள்: P. ஜெயச்சந்திரன், S. ஜானகி
இசை: இளையராஜா


No comments: