பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
( பொன்னென்ன பூவென்ன )
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது
( பொன்னென்ன பூவென்ன )
ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது
( பொன் )
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
( பொன் )
படம்: அலைகள் (1973)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன்