Friday, July 30, 2010

தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது... மனம எங்கோ செல்கின்றது

(தவிக்குது)

ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு

(தவிக்குது)

பொங்கும் ஆசை ஆற்றிலே நனைந்த தென்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே.. தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம் பல வித ரகம்
லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
பசிக்கொரு உணவென பாவை நீ வா வா

(தவிக்குது)

கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே
சிலையை போன்ற தோற்றமே தினம் என்னை வாட்டுமே
இன்னிசை சுரம் என் வசம் தரும்...
லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா

(தவிக்குது)


திரைப்படம்:நதியைத் தேடி வந்த கடல் (1980)
பாடகர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா
இசையமைப்பு: இளையராஜா




நதியை தேடி வந்த கடல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மகாராணி உன்னைத் தேடி

மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்

பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்

கை வந்து தொட்டது மெல்ல
காமத்துப் பாலுறை சொல்ல

இளமைப் பயிலும் தினம்
மகாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

மார்கழிப் பனித்துளி பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே

தென் பாண்டி முத்துகள் போலே
என்ன என்ன கோலங்கள் மேலே
ரசிக்கும் கவிதை மனம்

மகாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

திரைப்படம்: ஆயிரம் வாசல் இதயம்
பாடல்: மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
பாடகர்கள்: P. ஜெயச்சந்திரன், S. ஜானகி
இசை: இளையராஜா