Sunday, April 8, 2012

Oru Oodhappu Kan Simittugiradhu (1976)

Directed :S.P. Muthuraman
Produced :S.Sankaram
Ramya Cine Arts
Cast:Kamal Haasan,Vijayakumar,Sujatha,Vijaya geetha,T.K.veerasami,Vijayalakshmi
Music :V. Dakshinamoorthy

Oru Oodhappu Kan Simittugiradhu is a Tamil language film starring Kamal Haasan in the lead role of the protagonist, Ravi. This movie is based on a novel by the same name written by Pushpa Thangadorai.

Aandavan Illatha Ulagam
By:TMsoundhrajan & Vani Jairam

Nalla Manam Valga (நல்ல மனம் வாழ்க)
By:KJJesudhas

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க

(நல்ல)

பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாடும் (2)
தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி (2)
நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி

(நல்ல)

மண வாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும் (2)
குலமகளாய்க் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம் (2)
நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க

(நல்ல)

குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி

Sunday, March 18, 2012

மதனோற்சவம் ரதியோடு தான்

மதனோற்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்

உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்

மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ ஹோ

புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை

மதனோற்சவம் ரதியோடு தான்

ரதி தேவியோ பதியோடு தான்

கார்கால மேகம் திறண்டு புயாலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
கார்கால மேகம் திறண்டு புயாலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது

ஓஓஓஒ அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்

மதனோற்சவம் ...
ரதியோடு தான் ...
ரதி தேவியோ ...
பதியோடு தான்....

பாடல்: மதனோற்சவம் ரதியோடுதான்
பட்ம்: சதுரங்கம்
பாடியவர்: பாலு

Monday, December 12, 2011

என்னை விட்டால் யாருமில்லை

என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு
அழகர் மலையின் சிலைகளில் ஒன்று வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

காலழகெல்லாம் காட்டிய வண்ணம் கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன கண் படும் என்றே நினைத்தாயோ
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ராத்திரி நேரம் ரகசிய கடிதம் எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம் பொன்னொளி சிந்தும் இரவோடு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

திரைப்படம்: நாளை நமதே (1975)
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

Monday, December 5, 2011

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி

பாடலை கேட்க

இறைவன் இரண்டு பொம்மைகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
தென்றல் காற்றும் ஊமைக்காற்று
தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு
அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்

உள்ளத்தில் நல்லோர்தானே உயர்ந்தவர் இல்லையா
என் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

படம் : உயர்ந்தவர்கள்
இசை : சங்கர்-கணேஷ்
பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

அன்பு மேகமே இங்கு ஓடி வா

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

படம்: எங்கம்மா சபதம்
இசை:விஜய் பாஸ்கர்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்

எங்கம்மா சபதம் படத்தின் இந்தப் பாடலை பாலுவும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள். படத்தைப் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. 1974-இல் S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்.

நான் மெதுவாகத் தொடுகின்றபோது

நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

அழகான கன்னங்கள் அதில் இன்ப வண்ணஙள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
அழகான கன்னங்கள் அதில் இன்ப வண்ணஙள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
சிறு காயங்கள் வரும் மயங்கள்
அது காலைதான் ஆறுமோ
சிறு காயங்கள் வரும் மயங்கள்
அது காலைதான் ஆறுமோ
பொன்னாகும் கன்னம் என்னாகும்
பொன்னாகும் கன்னம் என்னாகும்

நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
ஒரு நாள் பார்த்து திருத் தோள் பார்த்து
நான் பெற வேண்டும் பூச்சரம்
ஒரு நாள் பார்த்து திருத் தோள் பார்த்து
நான் பெற வேண்டும் பூச்சரம்
தை மாதம் எந்த வைபோகம்
தை மாதம் எந்த வைபோகம்

நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

படம் : உனக்கும் வாழ்வு வரும்
குரல் : ஜெயச்சந்திரன், சுசீலா
இசை : சங்கர் கணேஷ்